BIG BREAKING: “1,020 கோடி ஊழல்.. சிக்கிய ஆதாரங்கள்”… அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!

By Nanthini on மாசி 20, 2026

Spread the love

தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மீது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் உடனடியாக வழக்குப் பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஆளும் திமுக தரப்பிற்கு இந்தத் தீர்ப்பு பெரும் அரசியல் நெருக்கடியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

நகராட்சி நிர்வாகத் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புவதிலும், பல்வேறு ஒப்பந்தங்களை ஒதுக்கீடு செய்வதிலும் சுமார் 1,020 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடுகள் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியிருந்தது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபி-க்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியும், எவ்வித மேல்நடவடிக்கையும் எடுக்கப்படாததால், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரை மற்றும் மதுரையைச் சேர்ந்த ஆதிநாராயணன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

   

இந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, அமலாக்கத்துறை வழங்கிய ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவித்தது. மேலும், அமைச்சருக்கு எதிரான இந்தப் புகார்கள் குறித்து உடனடியாக எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்து விசாரணையைத் தொடங்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

   

இந்த நீதிமன்ற உத்தரவு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அமைச்சர்கள் மீதான பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், மூத்த அமைச்சரான கே.என்.நேரு மீது சுமத்தப்பட்டுள்ள ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் புகார் மற்றும் நீதிமன்றத்தின் இந்த அதிரடி நடவடிக்கை, வரவிருக்கும் தேர்தலிலும் திமுக அரசுக்கு பெரும் சவாலாக அமையும் எனக் கருதப்படுகிறது.