சினிமா பாணியில் சேஸிங்…! டயர் வெடித்து நடுரோட்டில் தீப்பறக்க சென்ற கார்…. பல கி.மீ துரத்தி சென்று டிரைவரை பிடித்த போலீஸ்… இணையத்தில் தீயாக பரவும் அதிர்ச்சி வீடியோ…!!

By Devi Ramu on ஐப்பசி 1, 2026

Spread the love

அசாம் மாநிலத்தின் கார்பி ஆங்லாங் மாவட்டத்தில், காவல் துறை மற்றும் பொதுமக்களிடம் இருந்து தப்பிப்பதற்காகக் கார் ஒன்று டயர் வெடித் நிலையிலும் இரும்பு ரிம்மில் சாலையில் பொறிகள் பறக்கப் பல கிலோமீட்டர் தூரம் அதிவேகமாகத் தப்பி ஓடிய சினிமா பாணி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கார்பி ஆங்லாங் பகுதியில் காவல் துறையினரின் சோதனையில் இருந்து தப்பிக்க முயன்ற அந்த வாகனம், ஒரு டயர் சேதமடைந்த நிலையிலும் நிறுத்தப்படாமல் தொடர்ந்து நகோன் மாவட்டத்தை நோக்கிப் சீறிப் பாய்ந்தது. வழியில் எதிரே வந்த மற்றும் முன்னால் சென்ற பல வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியவாறே தப்ப முயன்ற அந்த வாகனத்தைக் காவல் துறையினரும் பொதுமக்களும் பல கிலோமீட்டர் தூரம் விரட்டிச் சென்றனர்.

   

இறுதியில் நகோன் மாவட்டத்தில் வைத்து அந்த வாகனத்தைக் காவல் துறையினர் அதிரடியாக மடக்கிப் பிடித்தனர். இந்த பயங்கரத் துரத்தல் சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், வாகனத்தில் வந்த நபர்கள் குறித்துக் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.