அமெரிக்காவின் ஐயோவா மாகாணத்தில் காவல்துறையினரின் அதிவேக துரத்தலின் போது, கட்டுப்பாட்டை இழந்த எஸ்.யு.வி கார் ஒன்று மிகப்பெரிய ஃபெட்எக்ஸ் கண்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதி நொறுங்கிய ஹாலிவுட் பட பாணி விபத்து வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐயோவா மாகாணம் கவுன்சில் பிளஃப்ஸ் பகுதியில், திருடப்பட்ட நம்பர் பிளேட்டுடன் அதிவேகமாகச் சென்ற செவ்ரோலெட் சுபார்பன் ரகக் காரைப் ரோந்து சென்ற காவல்துறையினர் காரை நிறுத்த முயன்று துரத்தியுள்ளனர். நள்ளிரவு 12:40 மணியளவில் 24-வது தெரு மற்றும் வெட்டரன்ஸ் மெமோரியல் நெடுஞ்சாலை சந்திப்பில் அதிவேகமாகப் பறந்த அந்தக் கார், திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பிரம்மாண்ட ஃபெட்எக்ஸ் லாரியின் முகப்புப் பகுதியில் மிகக் கொடூரமாக மோதியது.
மோதிய வேகத்தில் காரில் இருந்து புகை மூட்டமும் உதிரிப்பாகங்களும் காற்றில் பறந்தன. இக்கொடூர விபத்தின் காட்சிகள் போக்குவரத்துத் துறையின் கண்காணிப்பு கேமராவில் துல்லியமாகப் பதிவாகியுள்ளது. விபத்தில் பலத்த காயமடைந்த கார் ஓட்டுநர் உடனடியாக மீட்கப்பட்டு ஓமஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதிர்ஷ்டவசமாக லாரி ஓட்டுநர் காயங்களின்றி உயிர் தப்பினார். இச்சம்பவம் குறித்து அமெரிக்கக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் கோகர்ணாவிற்கு வார இறுதிச் சுற்றுலா சென்ற பெங்களூரு ஐடி நிறுவனத்தைச் சேர்ந்த 3 ஊழியர்கள் கடலில் சீறிப்பாய்ந்த…
மும்பையில், 6 மாதக் குழந்தை ஒன்றுக்கு இருந்த 'டைப் 3 லாரிஞ்சியல் க்ளெஃப்ட்' என்ற அரிய பிறவிக் குரல்வளைக் குறைபாட்டை…
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் வசூல் சாதனை படைத்த 'ஜெயிலர் 2' திரைப்படத்திற்கு அதிகாலை 6 மணி சிறப்புக் காட்சிகளுக்கு…
திரைப்பட இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் குடும்பத்தில் ஏற்பட்ட மீள முடியாத துயரங்களில் ஒன்று அவரது மகள் மீராவின் திடீர்…
பாலிவுட் நடிகை தியா மிர்சாவின் தீபாவளி வெடி எதிர்ப்பு வீடியோ சர்ச்சையான நிலையில், அவருக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டுப் பின்னர்…
பாலா இயக்கத்தில் உருவான 'நந்தா' திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, கருணாஸ் முதன்முதலில் ஒப்பந்தமான திரைப்படம் சிம்புவின் 'காதல் அழிவதில்லை'.…