மலைச்சாலையில் அஜாக்கிரதையா…? 300 அடி ஆழத்தில் கவிழ்ந்த கார்… துடிதுடித்து பலியான வாலிபர்… பெரும் சோகம்…!!

Spread the love

சென்னையைச் சேர்ந்த முகமது கயாத் (30) என்பவர் தனது நண்பர்கள் ஐந்து பேருடன் கொடைக்கானலுக்குச் சுற்றுலா சென்றுள்ளார். இன்று காலை அவர்கள் பூம்பாறை சாலையில் காரில் பயணம் செய்தபோது, பழனி வியூ பாயிண்ட் அருகே எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சுமார் 300 அடி ஆழமுள்ள மலைப்பள்ளத்தில் தலைகுப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய முகமது கயாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மற்ற 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காகக் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது கோடைக்காலம் தொடங்கி சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில், மலைச்சாலையில் நிகழ்ந்த இந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்களின் விபரங்களைச் சேகரித்து வரும் போலீசார், இது குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மலைப்பாதைகளில் வாகனங்களை இயக்கும்போது ஓட்டுநர்கள் கூடுதல் கவனத்துடனும், வேகக் கட்டுப்பாட்டுடனும் செல்ல வேண்டும் எனப் போக்குவரத்துப் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை அதிகாரிகள் முறையாக வழங்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Devi Ramu

Recent Posts

சுக்குநூறாக நொறுங்கிய லாரிகள்… துடித்துடித்து பலியான டிரைவர்கள்… கோர விபத்து…!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…

4 மணத்தியாலங்கள் ago

70 ஆண்டுகால மர்மம் முடிவுக்கு வருகிறது..! ஏலியன்கள் இருப்பது உண்மையா..? பொய்யா..? ரகசியங்களை உடைக்கப்போகும் ட்ரம்ப்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…

4 மணத்தியாலங்கள் ago

BREAKING : என்கிட்ட மோதாதே… வம்புக்கு இழுக்காதே… எதிர்கட்சியினரை அலறவிட்ட ஸ்டாலின்..!!

திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…

4 மணத்தியாலங்கள் ago

“என் அம்மா எனக்கு வேணும்” விபத்தில் உயிர் தப்பிய குழந்தை தாயை தேடி அழுத காட்சி.. ஒரே நாளில் மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்த கொடூரம்..!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…

4 மணத்தியாலங்கள் ago

ஆண்களுக்கு அதிர்ச்சி, பெண்களுக்கு மகிழ்ச்சி…! மெனு-வில் இப்படியொரு ரகசியமா…? இளம்பெண் கொடுத்த ‘Men+U’ விளக்கம் சிரிப்பலைகளில் இணையம்…!

சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…

4 மணத்தியாலங்கள் ago

“அம்மா என்னை விட்டுடுங்க” பள்ளிக்கு அனுப்பக் கதவைத் தட்டிய குடும்பத்தினர்… வீட்டுக்குள் காத்திருந்த பயங்கர அதிர்ச்சி… பெற்ற தாயே செய்த் கொடூரம்…!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…

5 மணத்தியாலங்கள் ago