“ஐயோ… காப்பாத்துங்க”… 10 அடி பள்ளத்தில் மூழ்கிய கார்… தண்ணீரில் மூழ்கியவர்களை சினிமா பாணியில்… காப்பாற்றிய 5 நண்பர்கள்… உ . பி – யில் பரபரப்பு…!

By Swetha on ஆவணி 25, 2026

Spread the love

உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் பகுதியில், நிகாசன் பாலியா நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று, பைக்கில் சென்றவர் மீது மோதாமல் காப்பாற்ற முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து 10 அடி ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்தது.

பள்ளத்தில் விழுந்த உடனே கார் தண்ணீரில் மூழ்கத் தொடங்கியது. அந்த நேரத்தில் அவ்வழியாகச் சென்ற ஐந்து நண்பர்கள் இந்த விபட்டைக் கண்டு உடனடியாகத் தண்ணீரில் குதித்தனர்.

   

https://twitter.com/ashishpaswan0/status/2092209943126712369/video/1

   

தேவதூதர்களைப் போல விரைந்து வந்த அந்த ஐந்து நண்பர்களும், காரில் சிக்கியிருந்த அனைவரையும் பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இந்தச் செயலை அப்பகுதி மக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.