திக் திக்… நிமிடங்கள்… எரிபொருள் நிலையத்தில் பயங்கரம்… தீடீரென கார் வெடித்து சிதறி இரு வாகனங்கள் சேதம்… நெஞ்சை பதறவைக்கும் ஷாக்கிங் வீடியோ…!

Spread the love

குஜராத் மாநிலம் வதோதரா அருகே உள்ள கர்ஜன் பகுதியில், தேசிய நெடுஞ்சாலை 48-இல் அமைந்துள்ள சிஎன்ஜி எரிபொருள் நிலைய ஒன்றில் கார் ஒன்றுக்கு எரிவாயு நிரப்பப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக காரின் சிஎன்ஜி சிலிண்டர் பலத்த சத்தத்துடன் பயங்கரமாக வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் காரின் பின்பகுதி முற்றிலுமாக சேதமடைந்து, பாகங்களும் கண்ணாடிகளும் பல மீட்டர் தூரத்திற்குத் தூக்கி வீசப்பட்டதால் அங்குப் பெரும் பரபரப்பும் பீதியும் ஏற்பட்டது.

எரிவாயு நிரப்பும் போது வாகனத்தில் இருப்பவர்கள் கீழே இறங்க வேண்டும் என்ற பாதுகாப்பு விதிமுறைகளின்படி, ஓட்டுநரும் பயணிகளும் காரை விட்டு வெளியேறியிருந்ததால் அதிர்ஷ்டவசமாக பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. எனினும், இந்த வெடிப்புச் சம்பவத்தின் தீவிரத்தால் அருகில் நிறுத்தப்பட்டிருந்த மேலும் இரண்டு வாகனங்கள் மற்றும் எரிபொருள் நிலையத்தின் சில பகுதிகள் சேதமடைந்தன.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கர்ஜன் தீயணைப்புத் துறையினரும் காவல்துறையினரும் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Swetha

Recent Posts

அடகடவுளே..! “என்னை கட்டிக்கோ!”… லவ் டார்ச்சர்… போலீஸ் புகார்… இறுதியில் மரணம்… ஐடி வட்டாரத்தை உலுக்கிய பகீர் சம்பவம்…!!

ஹைதராபாத்தைச் சேர்ந்த இளம் மென்பொருள் பொறியாளர் ஒருவர், தன்னுடன் பணியாற்றிய பெண் ஊழியரைத் திருமணம் செய்துகொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.…

7 minutes ago

மர்ம மரணம்… ஹோட்டல் அறைக்குள் நடந்தது என்ன?… கதறும் தந்தை.. சிக்கிய வங்கி மேலாளர்… நடுங்க வைக்கும் உண்மைகள்…!!

உத்தரப் பிரதேசத்தின் ஜான்சி பகுதியிலுள்ள விடுதி ஒன்றில், திருமணம் முடிந்து மூன்று மாதங்களே ஆன 28 வயது பெண் ஒருவர்…

14 minutes ago

நீதிபதி மகனுக்கு ஒரு நீதியா?… நள்ளிரவில் பறந்த சொகுசு கார்… துடிதுடிக்க பறிபோன உயிர்… 17 வயது மகன் செய்த காரியம்… குமுறும் குடும்பத்தினர்…!!

கேரளாவில் பணியாற்றும் நீதிபதி ஒருவரின் 17 வயது மகன், கொச்சியில் தனது தந்தையின் மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு காரை அதிவேகமாக…

21 minutes ago

நள்ளிரவில் வந்த போன் கால்…! 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… உறவினர் வீட்டு பின்புறம் கிடந்த சடலம்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில், இசை நிகழ்ச்சிக்குச் சென்ற 17 வயது சிறுமிக்கு நள்ளிரவில் வந்த…

30 minutes ago

“காதலனின் அறைக்கு சென்ற இளம்பெண்…” காதலியை அரிவாளால் வெட்டி கொன்று விட்டு ஓடும் லாரி முன் பாய்ந்த காதலன்… நெஞ்சை உலுக்கும் பயங்கர சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே காதலியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு, ஓடும் லாரியின் முன் பாய்ந்து 21 வயது…

58 minutes ago