திக் திக்… நிமிடங்கள்… எரிபொருள் நிலையத்தில் பயங்கரம்… தீடீரென கார் வெடித்து சிதறி இரு வாகனங்கள் சேதம்… நெஞ்சை பதறவைக்கும் ஷாக்கிங் வீடியோ…!

By Swetha on ஐப்பசி 4, 2026

Spread the love

குஜராத் மாநிலம் வதோதரா அருகே உள்ள கர்ஜன் பகுதியில், தேசிய நெடுஞ்சாலை 48-இல் அமைந்துள்ள சிஎன்ஜி எரிபொருள் நிலைய ஒன்றில் கார் ஒன்றுக்கு எரிவாயு நிரப்பப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக காரின் சிஎன்ஜி சிலிண்டர் பலத்த சத்தத்துடன் பயங்கரமாக வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் காரின் பின்பகுதி முற்றிலுமாக சேதமடைந்து, பாகங்களும் கண்ணாடிகளும் பல மீட்டர் தூரத்திற்குத் தூக்கி வீசப்பட்டதால் அங்குப் பெரும் பரபரப்பும் பீதியும் ஏற்பட்டது.

எரிவாயு நிரப்பும் போது வாகனத்தில் இருப்பவர்கள் கீழே இறங்க வேண்டும் என்ற பாதுகாப்பு விதிமுறைகளின்படி, ஓட்டுநரும் பயணிகளும் காரை விட்டு வெளியேறியிருந்ததால் அதிர்ஷ்டவசமாக பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. எனினும், இந்த வெடிப்புச் சம்பவத்தின் தீவிரத்தால் அருகில் நிறுத்தப்பட்டிருந்த மேலும் இரண்டு வாகனங்கள் மற்றும் எரிபொருள் நிலையத்தின் சில பகுதிகள் சேதமடைந்தன.

   

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கர்ஜன் தீயணைப்புத் துறையினரும் காவல்துறையினரும் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.