உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நடந்த ஒரு பயங்கர விபத்தின் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அதாவது வேகமாக வந்த ஒரு எஸ்யூவி கார் ஒன்று நெடுஞ்சாலையில் உள்ள தடுப்புச் சுவரில் பயங்கரமாக மோதி, பொம்மை கார் போல சாலையில் சுழன்றது. கான்பூர் தேஹாட்டில் உள்ள அக்பர்பூர் காவல் நிலையப் பகுதியின் கீழ் வரும் பரா டோல்கேட்டை கடந்த சிறிது நேரத்திலேயே, அதிவேக மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யூவி கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலையில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த கொடூரமான விபத்து நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. மேலும் இந்த வீடியோவனது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதிர்ஷ்டவசமாக, ஸ்கார்பியோவின் பின்னால் வேறு எந்த வாகனமும் வேகமாக வரவில்லை. இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சேதமடைந்த வாகனத்தை அகற்றி, போக்குவரத்து சீரமைக்கப்பட்டுள்ளது.
கோடைக்காலத்தில் நிலவும் அதிக வெப்பம் மற்றும் வியர்வை காரணமாக உச்சந்தலையில் ஏற்படும் பாதிப்புகள் முடி உதிர்வை அதிகரிக்கின்றன. இதற்குத் தீர்வாக…
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நீண்ட நேரம் 'வார் ரூமில்' முகாமிட்டிருந்தது…
வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இடமாற்றம் மற்றும் சேர்க்கை பல்வேறு யோகங்களை உருவாக்குகின்றன. அந்த வகையில், மே 1, 2026 முதல்…
ஆந்திர மாநிலம் நந்தியால் மாவட்டம் அல்லகட்டா பகுதியில், நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியைக் கத்தரிக்கோலால் குத்திக் கொலை செய்த கணவனின்…
வானியல் ரீதியாக சூரியனும் புதனும் ஒரே ராசியில் இணைவதை புதாதித்ய ராஜயோகம் என்று அழைக்கிறோம். இந்த அபூர்வ சேர்க்கை தற்போது…
தேர்தல் முடிவடைந்த இரண்டே நாட்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மேற்கொண்டுள்ள அதிரடி கட்சிப் பதவி மாற்றங்கள் அரசியல்…