திக் திக் நிமிடங்கள்…! ராங் ரூட்டில் சென்ற ஸ்கூட்டர்… கார் நேருக்கு நேர் மோதி தூக்கி வீசப்பட்ட பெண்… வைரலாகும் பதைப்பதைக்கும் வீடியோ…!!

By Devi Ramu on ஐப்பசி 19, 2026

Spread the love

மகாராஷ்டிரா மாநிலம் யவத்மால் பகுதியில், சாலை விதிகளைப் மதிக்காமல் தவறான பாதையில் வந்த ஸ்கூட்டரும், வளைவில் தவறான திசையில் ஓவர் டேக் செய்ய முயன்ற காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பதைபதைக்கும் விபத்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சாலையில் இருக்கும் இரட்டை வெள்ளை கோடுகளைத் தாண்டி தவறான திசையில் ஸ்கூட்டரில் வந்த நபர் இடதுபுறம் திரும்ப முயன்றபோது, அதே சாலையில் தவறான திசையில் வளைவில் மற்றொரு காரை ஓவர் டேக் செய்து அதிவேகமாக வந்த ஸ்கோடா கார் ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதியது.

   

மேலும், சாலையில் மணல் மற்றும் மண் சிதறிக் கிடந்ததால் வாகனங்களின் பிரேக் சரியாகப் பிடிக்காமல் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. இரு வாகன ஓட்டிகளுமே சாலை விதிகளை முற்றிலும் மீறிச் செயல்பட்டதால் நேர்ந்த இந்த கொடூர சம்பவம் குறித்துச் சாலை பாதுகாப்பு ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.