பகீர்..! ஓடும் கார் தீப்பற்றி எரிந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உடல் கருகி பலி.. அம்பலமான முதல் மனைவியின் கொடுர முகம்… சிக்கியது எப்படி..?

By Soundarya on வைகாசி 29, 2026

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் அருகே முன்னாள் பஞ்சாயத்து தலைவரான ராம்சிங், அவரது 2-வது மனைவி சூர்யக்யான் தேவி, மாமியார் பூசிதேவி மற்றும் உறவினர் மகிமா சவுத்ரி ஆகிய 4 பேரைக் கொன்று, காரோடு சேர்த்து எரித்த விபத்து நாடகத்தை போலீசார் அம்பலப்படுத்தியுள்ளனர். ராம்சிங்கின் 2-வது திருமணம் தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறில், அவரது முதல் மனைவி சுனிதா, மகள் சரிதா மற்றும் மகன் ஆகியோர் இணைந்து 4 பேரையும் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர். பின்னர், இந்த கொலையை விபத்து போலக் காட்டுவதற்காக, உடல்களைச் சொகுசு காரில் ஏற்றிச் சென்று நெடுஞ்சாலையோரம் தீ வைத்து எரித்துவிட்டு, வீட்டில் ஒன்றும் தெரியாதது போல் துக்கம் விசாரித்தவர்களிடம் அழுது நாடகமாடியுள்ளனர்.

முதலில் கார் தீப்பிடித்த விபத்தில் 4 பேர் இறந்ததாகக் கூறப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனையில் உடல்களில் காயங்கள் இருந்ததும், தடயவியல் சோதனையில் முரண்பாடுகள் இருந்ததும் கண்டறியப்பட்டது. விசாரணையின் போது, மாமியாருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது கார் தீப்பிடித்ததாக சுனிதா பொய் கதையைக் கூறியுள்ளார். ஆனால், போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், குடும்பத் தகராறு காரணமாக தாங்கள் தான் கொடூரக் கொலைகளைச் செய்து காரை எரித்ததாக சுனிதாவும் அவரது பிள்ளைகளும் உண்மையை ஒப்புக்கொண்டதை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.