கேப்டன் பிரபாகரன் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 22ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படுகின்றது. இப்படியான படத்தின் இசை, ட்ரெய்லர் மறு வெளியீட்டு விழாவில் நடிகர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கலந்து கொண்டு கண்ணீர் மல்க பேசினார். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், எம்.பி பதவி எல்லாம் எனக்கு முக்கியம் கிடையாது. கேப்டன் மகன் விஜய பிரபாகரன், எனக்கு வேறு பெருமை ஏதும் வேண்டாம். கடைசி வரை விஜயகாந்த் மகன் என்ற பெருமை மட்டும் எனக்கு போதும் என்று விஜயபிரபாகரன் கண்ணீர் மல்க பேசினார். மேலும் தமிழ் சினிமாவில் இந்தத் திரைப்படம் ஒரு எவர்கிரீன். இந்தப் படத்தை எடுப்பதற்கு கேப்டனும், பப்பாவும், இயக்குனர் செல்வமணி சாரும் முக்கியமானவர்களாக இருந்துள்ளனர்.
சின்ன வயதில் ராவத்தர் வாபாவை நான் பப்பா என்றுதான் அழைப்பேன். என் அப்பா மறைவுக்குப் பிறகு இதை முதல் படமாக நாம் கொண்டாட வேண்டும். அப்பா இன்று இல்லை என்றாலும் இந்த குழுவோடு இணைந்து நான் கொண்டாட வேண்டும் என்பதற்காக இங்கு வந்துள்ளேன். அப்பா இறந்து ஒரு வருடம் ஆகிய பிறகும் இன்னும் நான் அழுது கொண்டே இருக்கின்றேன் என பலரும் கிண்டல் செய்கிறார்கள். ஆனால் அப்பாவை நினைத்து நான் தினம்தோறும் அழுவேன். அதில் எந்த அசிங்கமும் கோழைத்தனமும் இல்லை என்ற விஜய பிரபாகரன் கண்ணீரோடு பேசினார்.
