கேப்டன் மில்லர் VS அயலான்…? உண்மையான பொங்கல் வெற்றியாளரே இந்த படம் தான்… சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் அளித்த ஓபன் ஸ்டேட்மென்ட்…

By Begam on தை 18, 2024

Spread the love

இந்த பொங்கலுக்கு தமிழ்நாட்டில் ரிலீசான கேப்டன் மில்லர்,  அயலான் திரைப்படங்களில் எந்த திரைப்படம் வசூலில் வெற்றி பெற்றது என்று ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்க, ஆனால் இந்த இரண்டு திரைப்படங்களையும் முந்தி நடிகர் அருண் விஜயின் மிஷன் (MISSION) திரைப்படம் நல்ல விமர்சனங்களை ரசிகர்கள் மத்தியில்  பெற்றுள்ளது.

Sivakarthikeyan

   

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான கேப்டன் மில்லர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரும் ஆவலை  ஏற்படுத்தி இருந்தது. இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், சிவராஜ் குமார் நடிப்பில் வெளியான ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே 17 கோடி வரை வசூலை எட்டியுள்ளது. இத்திரைப்படத்தில் பிரியங்கா மோகன், அதிதி பாலன், நிவேதா சதீஷ் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

   

 

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆவலை ஏற்படுத்திய இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர்  திரைப்படத்திற்கு போட்டியாக, நடிகர் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ திரைப்படம் ரிலீஸ் ஆனது. ஏலியன் ஜானரில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆவலை ஏற்படுத்தி இருந்த நிலையில், ஆனால் வசூலில் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது .

அதன்படி முதல் நாள் வசூலில் அயலான் திரைப்படம் வெறும் 10 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளதாககூறப்படுகிறது. ஆனால் இவ்விரண்டு திரைப்படங்களையும் முந்தி தற்பொழுது நடிகர்  அருண் விஜயின் மிஷன்  திரைப்படம் நல்ல விமர்சனங்களை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது. இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய், எமி ஜாக்சன் போன்ற பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் ஜனவரி 12-ல் வெளியான மிஷன் பார்ட் 1 திரைப்படம் தற்போது வரை நல்ல வசூல் வேட்டை நடத்தி வருவதாகவும்,

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.  இதை தொடர்ந்து பிரபல சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் இந்த பொங்கலின் வின்னராக மிஷன் திரைப்படத்தை குறிப்பிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இப்பதிவானது இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது . இதோ அந்த பதிவு…