கேப்டன் மில்லர் படத்தின் உண்மையான வசூல் இது தான்.. அட கடவுளே, அப்போ தயாரிப்பாளர் தலையில் துண்டா..?

By Ranjith Kumar

Updated on:

இந்தப் பொங்கலுக்கு தனுஷ் நடிப்பில் உருவாகிய கேப்டன் மில்லர் படம் வெளியானது, இந்தப் படத்துடன் பல படங்களும் களத்தில் மோத பட்டிருந்தது, இதில் அனைத்து படங்களுக்கும் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை பற்றி பல விமர்சனங்களும் வெளியாகி கொண்டிருந்தது, அந்த வகையில் அருண் மாதேஸ்வரன் இயக்கிய கேப்டன் மில்லர் படத்தின் உண்மையான பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா.

thanush

கேப்டன் மில்லர் படத்தை தயாரித்த செலவு 95 கோடி, பப்ளிசிட்டி செலவு 3 கோடி, டிஸ்ட்ரிபியூஷன் செலவு 2 கோடி, இப்படத்திற்கு தயாரிப்பாளர் வாங்கிய கடன் 30 கோடி, ஆக மொத்தம் கேப்டன் கேப்டன் மில்லர் படத்திற்கு ஆன மொத்த செலவு 130 கோடி.இப்படத்தில் தனுஷ் வாங்கிய சம்பளம் 25 கோடி, இயக்குனர் அருண் மாதேஸ்வரனின் சம்பளம் 1 கோடி, இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் சம்பளம் 2 கோடியே 72 லட்சம், பிரியங்கா மோகன் சம்பளம் 75 லட்சம், ஒளிப்பதிவாளர் சம்பளம் 50 லட்சம், மற்ற நடிகைகள், நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்களின் சம்பளம் 5 கோடி, ஆக மொத்தம் அப்படத்தில் வேலை செய்த நடிகர்கள், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் 35 கோடி.

   
thanush 1

கேப்டன் மில்லர் படத்தின் பிசினஸ் டீடைல்ஷ், இப்ப படத்தின் தமிழ்நாட்டு தியேட்டர்கள் 22 கோடி கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது,
கேரளா தியேட்டர்கள் ரைட்ஸ் பார்ச்சூன் சினிமாஸ் என்ற விநியோகஸ்தர் 2 கோடிக்கு வாங்கி இருக்கிறார், கர்நாடகா தியேட்டர்கள் ரைட்ச கே ஆர் ஜி ஸ்டூடியோஸ் என்கிற விநியோகஸ்தர் மூன்று கோடி 50 லட்சத்துக்கு வாங்கிருக்கிறார், ஆந்திரா மற்றும் தெலுங்கானா விநியோகஸ்தர் 2 கோடியே 10 லட்சம், ஓவர் சைஸ் ஏரியா ஒன்பது கோடி விற்கப்பட்டிருக்கு, டென்ட் கொட்டாய் என்ற ஸ்டுடியோ வாங்கி லைக்கா மூலமாக இப்படத்தை வெளியிட்டு வெளியிட்டு இருக்கிறது.

Dhanush Captain Miller Movie HD Images 1

ஹிந்தி டப்பிங் ரைட்ஸ் 11 கோடிக்கு வாங்கி இருக்காங்க, கேப்டன் பில்லர் படத்தின் டிஜிட்டல் ரைட் சைடு அமேசான் நிறுவனம் 50 கோடிக்கு வாங்கி வாங்கி இருக்கிறார்கள். சாட்டிலைட் ரைட்ஸ் சன் டிவி 17 கோடிக்கு வாங்கி இருக்கார்கள், சரிகம நிறுவனம் இந்த ஆடியோ ரைட்ஸை மூன்று கோடி ரூபாய்க்கு வாங்கி இருக்கிறார்கள். ஆக மொத்தம் கேப்டன் மில்லரின் மொத்த கலெக்ஷன் 119 கோடியே 60 லட்சம்தான்.

கேப்டன் மில்லரின் மொத்த பட்ஜெட் செலவு 130 கோடி, ஆனால் இப்படம் வசூல் ஆகியுள்ள கலெக்ஷன் 119 கோடியே 60 லட்சம் தான். ஆக மொத்தம் தயாரிப்பாளருக்கு 10 கோடியே 40 லட்சம் நஷ்டம்,

author avatar
Ranjith Kumar