மேற்கு வங்கத்தில் நிலவும் அரசியல் பரபரப்புகளுக்கு இடையே, முதலமைச்சர் பதவியில் இருந்து தாம் விலகப்போவதில்லை என மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்துள்ளார். அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் (ECI) துணையோடு பாரதிய ஜனதா கட்சி முறைகேடுகளில் ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ளதாகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டிய சுமார் 100 தொகுதிகள் திட்டமிட்டுத் திருடப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் ஆவேசமாகத் தெரிவித்தார். தான் வெறும் ஒரு அரசியல் கட்சிக்கு எதிராக மட்டும் போராடவில்லை என்றும், ஒட்டுமொத்த அரசு இயந்திரம் மற்றும் அமைப்புகளுக்கு எதிராகவே தனது அறப்போர் தொடர்வதாகவும் மம்தா பானர்ஜி திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
