நடிகை ரஷ்மிகா மந்தனாவை மேக்கப் இல்லாம பாத்துருக்கீங்களா?… என்ன அழகு என்ன அழகு…நீங்களே பாருங்க…

By Begam

Published on:

நடிகை ராஷ்மிகா மந்தனா துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட நடிகையான இவர், 2016-ம் ஆண்டு வெளியான ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். கன்னடத்தில் போதிய வாய்ப்பில்லாததால் தெலுங்கு பக்கம் வந்த ராஷ்மிகா, குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக மாறிவிட்டார்.

   

 

தெலுங்கில் மட்டும் நடித்த வந்த ராஷ்மிகா, தற்போது இந்தி, தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.அவர் நடிப்பில்  வெளியான ‘புஷ்பா’ படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் ஹிட் ஆனது. இவர் தமிழில் தற்பொழுது இளைய தளபதி விஜய் உடன் இணைந்து ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டுள்ளார்.

 

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.தினமும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிடுவார். தற்பொழுது நடிகை ராஷ்மிகா சலூனில் இருந்து துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

author avatar