#image_title
நாம் பலர் வீடுகளிலோ அல்லது அலுவலகங்களிலோ குதிரைகளின் போட்டோக்கள் தொங்க விட்டிருப்பதை பார்த்திருக்கலாம். ஒரு குதிரை ஓடுவது போன்றோ அல்லது மூன்று ஐந்து ஏழு குதிரைகள் ஓடுவது போன்ற போட்டோக்கள் இருக்கும். இது எதற்காக வைத்திருக்கிறார்கள்? இது வாஸ்து சாஸ்திரத்தில் முக்கியத்துவம் பெறுகிறதா என்பதை பற்றி இனி காண்போம்.
வாஸ்துபடி ஏழு குதிரைகளின் ஓவியத்தை வீட்டில் தொங்கவிடுவது வளர்ச்சி மற்றும் நல்ல அதிர்ஷ்டத்திற்கும் மற்றும் மங்களமானதாகவும் கருதப்படுகிறது. உங்கள் வீட்டில் அல்லது அலுவலகத்தில் ஓடும் குதிரையின் படத்தை வைத்தால் அது உங்கள் வேலையை வேகப்படுத்துகிறது. இந்த ஓடும் குதிரைகள் வெற்றி, முன்னேற்றம் மற்றும் வலிமையின் சின்னங்களாக கருதப்படுகிறது.
நீங்கள் ஓடும் குதிரைகளை வீட்டில் வாங்கி மாட்ட வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் ஏழு ஓடும் குதிரைகளை பார்த்து வாங்குங்கள். இது வணிக முன்னேற்றத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. இந்த ஓவியத்தை ஒருவர் இடத்தில் மாட்டி வைப்பதன் மூலம் தைரியம், புத்திசாலித்தனம், அறிவு, தூய்மை போன்ற குணங்கள் சிறந்து விளங்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஓடும் குதிரைகள் படங்களை எந்த திசையில் வைத்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை இனி பார்ப்போம்.
இந்த ஏழு ஓடும் குதிரைகள் போட்டோவை தெற்கு திசையில் மாட்டி வைக்கும் போது அது புகழ் மற்றும் வெற்றிக்கு காரணியாக மாறும். வடக்கு திசையில் மாட்டி வைக்கும் போது வியாபாரத்தில் லாபம் பணவரவு போன்றவற்றை குறிக்கும். குதிரை அதிர்ஷ்டத்தின் சின்னமாக பார்க்கப்படுகிறது.
கிழக்கு திசையில் குதிரைகளின் ஓவியத்தை மாட்டி வைக்கும் போது தடைபட்ட காரியங்கள் வேகமாக செயல்படும். தொழில் வளர்ச்சி உண்டாகும். மேற்கு திசையில் இந்த ஓவியத்தை மாட்டி வைக்கும் போது ஒற்றுமை ஏற்படும். இந்த ஓடும் குதிரைகள் படத்தை தவிர செம்பு பித்தளை அல்லது வெள்ளியால் செய்யப்பட்ட ஓடும் குதிரையின் சிலையை கூட வைக்கலாம்.
இந்த ஓடும் குதிரைகளின் ஓவியங்களை வீட்டின் ஹாலிலோ அல்லது அலுவலகத்திலோ மாட்டி வைக்கலாம். உங்கள் படுக்கையறையில் மாட்டி வைக்க கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் இந்த ஓவியத்தை வாங்கும்போது மனதார வாங்க வேண்டும். ஆக்ரோஷமாக ஓடும் குதிரைகளின் ஓவியத்தை வாங்காதீர்கள். இது துரதிஷ்டத்தின் அம்சமாகும். படத்தில் உள்ள குதிரைகள் முழுவதுமாக முகம் காட்டப்பட்டு இருக்க வேண்டும். குதிரை ஓடுவது போல இருப்பது கட்டிடத்தின் உள்பக்கமாக ஓடுவது போலவே மாட்டி வைக்க வேண்டும். வெள்ளை குதிரைகள் ஓடுவது போன்ற ஓவியத்தை தேர்ந்தெடுப்பது நல்ல செழிப்பையும் அதிர்ஷ்டத்தையும் கொண்டுவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தான் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் மகத்தான…
தமிழக அரசியல் வரலாற்றில் முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஒரு நேரடித் தேர்தலில் தோல்வியைத் தழுவியிருப்பது…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஒரு மிகப்பெரும் சக்தியாக உருவெடுத்துள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய்…
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைத்துள்ள நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்', நீண்டகாலமாக கோலோச்சி வந்த திராவிடக்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, 'ஜனநாயகன்' திரைப்படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து…
தமிழக அரசியல் வரலாற்றில் 2026-ஆம் ஆண்டு ஒரு மகத்தான மாற்றத்திற்கான ஆண்டாக உருவெடுத்துள்ளது. வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, தமிழக வெற்றிக்…