பெற்றோர்களே.. உங்க குழந்தைகள் அதிகமாக ஃபோன் பாக்குறாங்களா.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

By Divyamayakannan on புரட்டாதி 11, 2025

Spread the love

உலகமே செல்போனில் தான் இயங்குது என்று சொல்லலாம். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருமே தற்போதைய காலகட்டத்தில் செல்போன் அதிக நேரம் உபயோகிக்கிறார்கள். செல்போனை நாம் இயக்குகிறோம் என்று சொல்லாமல் நம்மளை செல்போன் இயக்குகிறது என்று சொல்லலாம். சாப்பிடும் போது குழந்தை அழுதால் ஃபோன் கொடுப்பது, வேலை செய்யும் போது குழந்தை அழுதால் உடனே போன் கொடுப்பது, இன்று பிறந்த குழந்தைகள் கூட பேனை தான் பார்க்கிறது. நாம் சரி என்று நினைத்துக் கொண்டு இருக்கும் அனைத்துமே சரி அல்ல. தற்போது செல்போன் திரையை அதிக நேரம் பார்த்தால் குழந்தைகளுக்கு கூட இதய பிரச்சினை வருமா என்று ஆய்வில் கண்டுபிடித்துள்ளார்கள்.

ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. செல்போன் மற்றும் தொலைக்காட்சியை அதிக நேரம் பார்த்தால் உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், இன்சுலின் எதிர்ப்பு போன்ற இதய இயக்கத்தை கூட கட்டுப்படுத்துமாம். இவர்களுக்கு எதிர்காலத்தில் இதய நோய் வருவதற்கு கூட வாய்ப்பு உள்ளதாம். இவ்வளவு தீமைகள் இருக்கின்றது என்று தெரிந்தாலும் கூட செல்போன் பயன்பாட்டை தவிர்க்க முடியாது,  நம்மோடு இணைந்து விட்டது. இந்த பயன்பாட்டை குறைப்பதற்கு சில அறிவுரைகள் வந்துள்ளது. நீண்ட நேரம் உபயோகிக்காமல் 1 மணி நேரம் அல்லது 2 மணி நேரம் ஒரு நாளுக்கு உபயோகிக் கொடுக்கலாம். வார இறுதி நாட்களில் இது போன்ற  செல்போன் ஒதுக்கி வைத்து விட்டு ஃபேமிலி டைம் ஸ்பென்ட் பண்ணலாம். பேசுவது , வெளியில் செல்வது, ஊர் சுற்றுவது என்று இது போன்ற செயல்களில் ஈடுபடலாம்.