ஹரியானா மாநிலம் பகதூர்கட்டில், காதலர் தின கொண்டாட்டத்திற்குப் பிறகு நடந்த ஒரு கோரமான கொலைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குருகிராமில் பட்டயக் கணக்காளராக பணியாற்றும் அன்ஷுல் தவான் என்பவர், எச்டிஎப்சி வங்கியில் பணியாற்றி வந்த தனது மனைவி மஹக்கை, காதலர் தினத்தை ஒன்றாகக் கொண்டாடி முடித்த அன்றே கத்தரிக்கோலால் குத்திக் கொலை செய்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியின் போது தனது மனைவியின் கழுத்தை அறுத்துவிட்டதாகக் கூறி அன்ஷுல் நாடகமாடினார். இதுகுறித்து தகவலறிந்த ஜாஜ்ஜர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். சுமார் 18 மணி நேரத் தீவிர விசாரணைக்குப் பிறகு, அன்ஷுல் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் காவல்துறையினருக்கு அவர் மீது சந்தேகம் வலுத்தது.
விசாரணையில், அன்ஷுல் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு இந்தத் திட்டமிட்ட கொலையைச் செய்தது வெளிச்சத்திற்கு வந்தது. கைரேகைகள் சிக்காமல் இருக்கக் கையுறைகளை அணிந்து கொண்டு, முதலில் மஹக்கின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, பின்னர் கத்தரிக்கோலால் அவர் கழுத்தை அறுத்துக் கொடூரத்தை அரங்கேற்றியுள்ளார். குற்றத்தை மறைக்க அவர் செய்த தந்திரங்கள் எடுபடாமல் காவல்துறையினரிடம் வசமாக மாட்டிக்கொண்டார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தான் இவர்களுக்குத் திருமணம் நடந்துள்ளது. மணம் முடித்த ஐந்தே மாதங்களில், சந்தேகப் பேயால் ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கை பறிபோயிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அன்ஷுலை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஒரு படித்த நபர் இத்தகைய பாதகச் செயலில் ஈடுபட்டது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…