உணர்வுகளை மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா..? அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க விவகாரம்.. சி.விஜயபாஸ்கரின் எக்ஸ் பதிவு பரபரப்பு..!!

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைக் பிடித்தது. இந்தத் தேர்தலில் அதிமுக 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்டதால், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையில் தனி அணி உருவானது. சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் இந்த அணியைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க. அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதனைத் தொடர்ந்து, தங்களுக்கு ஆதரவாக வாக்களித்த 25 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய எடப்பாடி பழனிசாமி தரப்பு சபாநாயகரிடம் மனு கொடுத்தது. இதற்கிடையே, 4 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தனர். நீண்ட இழுபறிக்குப் பின்னர், மற்ற 21 எம்.எல்.ஏ.க்களும் மன்னிப்பு கடிதம் கொடுத்ததால் அவர்கள் மீதான நடவடிக்கையை எடப்பாடி பழனிசாமி திரும்பப் பெற நடவடிக்கை எடுத்தார். எனினும், அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் தொடர்ந்து விலகி த.வெ.க.வில் இணைந்து வருகிறார்கள்.

இந்த அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் எக்ஸ் தளத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “தலைமை என்பது அதிகாரமோ, ஆணவமோ அல்ல… அர்ப்பணிப்பு மிகுந்த அரவணைப்பு; உழைக்கும் தொண்டர்களின் மனதை வெல்ல முடியாத தலைமை, மக்களின் மனதை எப்படி வெல்லும்? உணர்வுகளை மதிக்காத இடத்தில் உண்மையான பயணம் சாத்தியமா?” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Soundarya

Recent Posts

தமிழ்நாட்டில் 21,655 பேருக்கு டெங்கு… 10 பேர் பலி… வீடுகளுக்கே வந்து ஆய்வு செய்யும் அமைச்சர்…. மக்களுக்கு அரசு எச்சரிக்கை…..!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், சென்னை மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் ஒப்பந்த செவிலியர்களின் போராட்டம் குறித்து மருத்துவம்…

15 seconds ago

“இலவச மின்சாரத்திற்கு ஆப்பா?”…. ஸ்மார்ட் மீட்டர் டெண்டரால் அதிர்ச்சியில் தமிழக மக்கள்…. வெளியான ஷாக் நியூஸ்….!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் ஸ்மார்ட் மீட்டர் டெண்டர் முடிவைக் கண்டிக்கும்…

9 minutes ago

கடவுளே…! சைக்கிளில் சென்ற 12 வயது சிறுமி… மோதிவிட்டு நிற்காமல் சென்ற பள்ளி பேருந்து…. இணையத்தில் வைரலாகும் திக் திக் வீடியோ…!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில், பள்ள முடிந்து சைக்கிளில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த 12 வயது பள்ளி மாணவி மீது அதிவேகமாக…

13 minutes ago

திமுகவுக்கு பேரதிர்ச்சி… ஸ்டாலினுக்கு செக் வைத்த செந்தில் பாலாஜி?…. தாராபுரத்தில் நடக்கும் அந்த ‘ரகசிய’ அரசியல் ஆபரேஷன்….!

தமிழக அரசியல் களத்தில் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆளும்கட்சியான தவெக பிரதான எதிர்க்கட்சியான அதிமுக…

22 minutes ago

“விழுவது போல நடித்து…” 73 வயது முதியவரை  திசைதிருப்பிய பெண்… ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க கட்டி அபேஸ்… அதிர வைக்கும் வீடியோ வைரல்..!!

சென்னையில் பேருந்தில் பயணித்த 73 வயது முதியவரிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்பிலான 714 கிராம் தங்கக் கட்டியைத் திருடிய…

22 minutes ago

“ரோடு காலியா இருக்கு…. ஆனா…” செடிகளுக்கு இடையே புகுந்து சென்ற பைக் ஓட்டி…! சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், அருகில் உள்ள சாலை காலியாக இருந்தபோதிலும், நபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தைப் பாதசாரிகள் நடமாடும்…

29 minutes ago