தொலைதூரப் பணி மற்றும் ‘வீட்டிலிருந்தே வேலை’ கலாச்சாரம் ஊழியர்களுக்கு எங்கிருந்து வேண்டுமானாலும் பணிபுரியும் சுதந்திரத்தை வழங்கியுள்ளது. இருப்பினும், சமீபத்தில் இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, இந்தத் தொழில்நுட்பச் சுதந்திரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. நியூயார்க்கைச் சேர்ந்த Content Creator சாத் அக்தர் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு வீடியோவில், நபர் ஒருவர் எடாரியில் மீது சவாரி செய்துகொண்டே தனது மடிக்கணினியைத் திறந்து அலுவலகப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
அந்த வீடியோவில், அந்த நபர் ஒட்டகத்தின் திமிலின் மீது லேப்டாப்பைச் சமநிலைப்படுத்தி, அலுவலக மீட்டிங் ஒன்றில் முழு கவனத்துடன் பங்கேற்பது போலக் காட்சியளிக்கிறது. மேலும், அந்த வீடியோவின் மேல், “அவன் தன் மேலாளரிடம் வீட்டிலிருந்து வேலை செய்வதாகக் கூறினான்” என்ற வேடிக்கையான வாசகமும் இடம் பெற்றுள்ளது. எடாரியின் எல்லையற்ற மணல் பரப்பிற்கு நடுவே, ஒரு நபர் கார்ப்பரேட் மீட்டிங்கில் கலந்துகொள்ளும் இந்த அசாதாரண காட்சி நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி, நெட்டிசன்களிடையே பெரும் விவாதத்தையும் நகைச்சுவையான கமெண்டுகளையும் கிளப்பியுள்ளது. சிலர் இதை “வேலையை எங்கிருந்து வேண்டுமானாலும் செய்யலாம்” என்ற தற்போதைய ட்ரெண்டின் உச்சக்கட்டம் என்று பாராட்டியுள்ளனர். அதே சமயம், “எடாரியின் நடுவே இவருக்கு எப்படி இணைய இணைப்பு கிடைக்கிறது? பையில் ஸ்டார்லிங்க் வைத்துள்ளாரா?” என்றும், “அலுவலகத்தின் டெட்லைன்களில் இருந்து தப்பிக்க எடாரிக்குச் சென்றாலும் தப்பிக்க முடியாது போல” என்றும் நெட்டிசன்கள் பலவாறாகக் கிண்டல் செய்து வருகின்றனர்.
டெல்லியின் நெரிசல் மிகுந்த குடியிருப்புப் பகுதியில், நிலநடுக்கம் ஏற்பட்ட மறுநாளே ஐந்து மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்த விபத்தில்…
சென்னையில் உள்ள முக்கிய மற்றும் பரபரப்பான சாலைகளில் ஒன்றான திருவான்மியூர் டைடல் பார்க் அருகே, திடீரென சாலையில் பெரிய பள்ளம்…
கைதி ஒருவரை அழைத்துக்கொண்டு ரயிலில் பயணித்த ராஜஸ்தான் மாநிலக் காவலர்களுக்கும், ரயில்வே பாதுகாப்புப் படை வீரருக்கும் இடையே முறையான பயண…
ஃபிளை துபாய் விமானத்தில் நடுவானில் திடீரென ஏற்பட்ட விபத்து அல்லது உடல்நலக்குறைவால் கடுமையாகக் காயமடைந்த இந்திய பைலட் ஸ்மித் மச்சாரை,…
உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி பகுதியில் தனது சிறுமி மகளுடன் காரில் பயணித்துக் கொண்டிருந்த ஒரு பெண், நடுவழியில் எதிர்பாராத…
குன்றத்தூரில் தனது குழந்தைகளைக் கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற அபிராமியின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.…