BREAKING: முடிவை மாற்றினார் சிவி சண்முகம்… திடீர் திருப்பம்..!!

By Soundarya on வைகாசி 29, 2026

Spread the love

முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான சி.வி. சண்முகம் தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தனது சட்டமன்ற உறுப்பினர் (MLA) பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணையவுள்ளதாக முன்பு தகவல்கள் வெளியாகின. ஆனால், தற்போது அத்தகவல்களை மறுத்துள்ள அவர், மக்களுக்காக ஒரு சட்டமன்ற உறுப்பினராகத் தனது கடமைகளை முழுமையாக ஆற்றுவேன் என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

சி.வி. சண்முகத்தின் இந்த திடீர் முடிவு முதலமைச்சர் விஜய் தரப்பிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தன்னை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்த மயிலம் தொகுதி மக்களுக்கு நேரில் சென்று தனது நன்றியையும் அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர் மாற்றுப் கட்சிக்கு மாறுவதாக எழுந்த வதந்திகளுக்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.