2026 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி ஒரு சர்வாதிகாரப் போக்கைக் கடைபிடிப்பதாகவும், திமுகவை எதிர்க்க உருவான இயக்கத்தை இன்று அதே கட்சியுடன் ரகசிய உடன்பாடு கொள்ளும் நிலைக்குத் தரம் தாழ்த்திவிட்டதாகவும் அவர் சாடியுள்ளார். குறிப்பாக, கட்சியில் எவரும் கேள்வி கேட்க முடியாத சூழல் நிலவுவதாகவும், உழைத்தவர்கள் ஓரங்கட்டப்படுவதால் கட்சி சீட்டுக்கட்டு போலச் சரிந்து வருவதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைமை மீது சி.வி. சண்முகம் முன்வைத்துள்ள மிக முக்கியமான குற்றச்சாட்டு, வாரிசு அரசியல் குறித்ததாகும். தனது மகனை அரசியலுக்குக் கொண்டு வருவதற்காக எடப்பாடி பழனிசாமி ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருவதாகவும், அதிமுக ஒரு குடும்பத்தின் பிடிக்குள் சிக்கிவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், கடந்த தேர்தலில் அதிமுக பெற்ற 47 இடங்கள் பாமக போட்ட “பிச்சை” என்றும், அந்தக் கூட்டணி இல்லையென்றால் அதிமுக ஒற்றை இலக்க வெற்றியை மட்டுமே பெற்றிருக்கும் என்றும் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். எஸ்.பி. வேலுமணி அணி, எடப்பாடி அணி என கட்சி இரண்டாகப் பிரிந்துள்ள சூழலில், தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பின் எம்.எல்.ஏ-க்கள் வெளியேறுவது கட்சியின் பலவீனத்தையே காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இறுதியாக, அதிமுக சந்தித்த தொடர் தோல்விகளுக்கு எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்க வேண்டும் என்றும், கட்சி உடனடியாக சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் சண்முகம் வலியுறுத்தியுள்ளார். சிதறிக் கிடக்கும் அதிமுக மீண்டும் ஒன்றுபட வேண்டும் எனவும், இதற்காக உடனடியாக பொதுக்குழு அல்லது செயற்குழு கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஒருவேளை தலைமை இதற்குச் செவிசாய்க்கவில்லை என்றால், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தாங்கள் முடிவு செய்ய வேண்டியிருக்கும் என்ற அவரது எச்சரிக்கை, எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு விடப்பட்ட நேரடி சவாலாகப் பார்க்கப்படுகிறது
தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…
ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…
குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…
உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவோ பகுதியில், உடல்நலம் குன்றிய கணவரை விட்டுவிட்டு, 50 வயது பெண் ஒருவர் தனது சொந்த…
பெங்களூரில், கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதுடைய கிரண் என்ற இளைஞர், அதே பகுதியில் வசிக்கும் 19…
துருவேக்கெரே KSRTC பேருந்து நிலையம் எதிரே உள்ள கேக் வேர்ல்ட் பேக்கரியில் JDS தலைவர்கள் இருவர் ஈடுபட்ட மோதலில், பேக்கரி…