இரவோடு இரவாக திடீர் முடிவு… MLA பதவியை ராஜினாமா செய்கிறார் CV சண்முகம்… இபிஎஸ்-க்கு செம ஷாக்….!

By Nanthini on வைகாசி 28, 2026

Spread the love

அதிமுகவின் மூத்த நிர்வாகியும் சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.சண்முகம் தனது பதவியை இன்று ராஜினாமா செய்ய உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரை சமாதானப்படுத்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தரப்பு மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்ததாகவும், தனது ராஜினாமா முடிவில் சி.வி.சண்முகம் மிகவும் உறுதியாக இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் வட்டாரத்தில் பேசப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.

இந்த முடிவு உண்மையாகும் பட்சத்தில், நடப்பு சட்டமன்றத்தில் இருந்து விலகும் 5-வது நபராக இவர் மாறுவார் என்பதுடன், அண்மைக் காலமாக தமிழக அரசியலில் புயலைக் கிளப்பி வரும் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) அவர் இணைவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.