இன்று வாக்குப்பதிவு…. EPIC கார்டு இல்லாமலேயே வாக்களிக்கலாம்…. தேர்தல் ஆணையம் தந்த பம்பர் ஆஃபர்….!

By Nanthini on ஐப்பசி 6, 2026

Spread the love

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று (அக்டோபர் 6) காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னதாக செப்டம்பர் 7-ல் தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்த நிலையில், கடந்த சில வாரங்களாகக் களம் சூடுபிடித்திருந்தது. இத்தேர்தலையொட்டி இரு தொகுதிகளிலும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதோடு, பாதுகாப்பு காரணங்களுக்காகப் பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்தலில் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி மற்றும் இடதுசாரிகள் என 5 முனைப் போட்டி நிலவுகிறது. மதுராந்தகத்தில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத் உட்பட 27 பேர் போட்டியிடுகின்றனர். அதேபோல், தாராபுரத்தில் தவெக சார்பில் சத்யபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி உட்பட 22 பேர் களத்தில் உள்ளனர். தலைவர்களின் தீவிரப் பிரச்சாரத்தால் தேர்தல் களம் இறுதிக்கட்டம் வரை அனல் பறந்தது.

   

https://twitter.com/TNelectionsCEO/status/2106667170373771522/photo/1?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2106667170373771522%7Ctwgr%5Edb2da1ca526029dbb7c23186c68db859e183e799%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftamil.oneindia.com%2Fnews%2Fchennai%2Fmaduranthakam-dharapuram-by-elections-today-12-alternative-ids-allowed-for-voting-836051.html

   

தொகுதி அளவிலான வாக்காளர்கள் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, மதுராந்தகத்தில் 1,04,886 ஆண்கள், 1,08,738 பெண்கள், 65 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,13,689 வாக்காளர்கள் உள்ளனர். தாராபுரத்தில் 1,07,285 ஆண்கள், 1,16,013 பெண்கள், 8 திருநங்கைகள் என மொத்தம் 2,23,306 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இரு தொகுதிகளிலும் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து காணப்படுகிறது.

 

வாக்குப்பதிவை முன்னிட்டு மதுராந்தகத்தில் உள்ள 285 வாக்குச்சாவடிகளில் 60 இடங்களும், தாராபுரத்தில் உள்ள 320 வாக்குச்சாவடிகளில் 18 இடங்களும் பதற்றமானவையாகக் கண்டறியப்பட்டுள்ளன. இங்குத் துணை ராணுவப் படையினருடன் கூடுதல் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், பறக்கும் படைகளும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், பான் கார்டு உள்ளிட்ட 12 அரசு அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கு முன்பாக, அனைத்து அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டு செல்லப்படவுள்ளன. இதைத் தொடர்ந்து, தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் அக்டோபர் 9-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.