தமிழகத்தில் விரைவில் வரவிருக்கும் இடைத்தேர்தலை எதிர்கொள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தற்போதே தீவிர ஆலோசனைகளிலும் வியூகங்களிலும் இறங்கியுள்ளார். தேர்தல் நடக்கவிருக்கும் 6 தொகுதிகளில், 5 தொகுதிகள் ஏற்கனவே அதிமுக வசம் இருந்தவை என்பதால், அவற்றை மீண்டும் கைப்பற்றி தங்களின் பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அக்கட்சி உள்ளது.
இதனால், ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வாய்ப்புள்ள பலமான வேட்பாளர்களை பார்த்துப் பார்த்து தேர்வு செய்யும் பணிகளில் EPS மிகக் கவனமாக ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், தென்மாவட்டங்களில் முக்கியத்துவம் வாய்ந்த அம்பாசமுத்திரம் தொகுதியில், நெல்லை புறநகர் மாவட்டச் செயலாளர் ராம சுப்பிரமணியன் அல்லது கடையநல்லூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி (குட்டியப்பா) ஆகிய இருவரில் ஒருவருக்கு அதிமுக வேட்பாளராகக் களம் இறங்க அதிக வாய்ப்பிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
