சின்ன தொழில் தான்… ஆனா சிகரத்தைத் தொட்ட அசாத்திய உழைப்பு… துபாயை கலக்கும் “புல்லா”…!

By Visaka on ஆனி 29, 2026

Spread the love

ஆசைப்படும் தொழிலை அர்ப்பணிப்புடன் செய்தால், அது நம்மை உன்னத உயரத்திற்கு கொண்டு செல்லும் என்பதற்கு துபாயில் வசிக்கும் 32 வயதான நுயென் புவாங் (Nhu Nguyen Phuong) என்ற இளம் பெண் ஒரு சிறந்த உதாரணம். ‘புல்லா’ என்று தனது வாடிக்கையாளர்களால் அன்போடு அழைக்கப்படும் இவர், கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வியட்நாமில் இருந்து துபாய்க்கு குடிப்பெயர்ந்து ஒரு நகக்கலை நிபுணராகதனது பயணத்தைத் தொடங்கினார். இந்தத் துறையில் ஏற்கனவே 12 வருடங்களுக்கும் மேலாகக் கடின உழைப்புடன் அனுபவம் பெற்றிருந்த ஃபுல்லா, தனது அசாத்திய திறமையால் துபாய் இளைஞர்கள் மற்றும் பெண்களின் மனதைக் கவர்ந்தார். இவருடைய கைவண்ணத்தில் உருவான நக அலங்காரங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி, தற்போது இணையவாசிகளின் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

புல்லாவின் இந்த அசுர வளர்ச்சிக்குக் காரணம், அவரது நேர்த்தியான திறமையும் வாடிக்கையாளர்களுக்கு அவர் வழங்கிய குறைவான கட்டணமும் தான். தரமான சேவை, கனிவான உபசரிப்பு, நியாயமான விலை என இவரது அணுகுமுறையால் நாள்தோறும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. இதன் விளைவாக, துபாயின் புகழ்பெற்ற ‘ஜேஎம்இஆர் வில்லேஜ் சர்கிள்’ பகுதியில் தனது சொந்த அழகு கலை நிலையத்தை தொடங்கினார். அதில் கிடைத்த லாபத்தை ஆடம்பரமாகச் செலவழிக்காமல், புத்திசாலித்தனமாக மீண்டும் தொழிலிலேயே முதலீடு செய்தார். இதன் மூலம் தற்போதைய நிலையில் அவர் மாதம் ஒன்றிற்கு சுமார் 10 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டி சாதனை படைத்து வருகிறார்.

   

எதிர்காலக் கனவுகள் குறித்துப் பேசும் ஃபுல்லா, தனக்கு 50 வயதாகும் போது நிம்மதியான ஓய்வு வாழ்க்கையை வாழ்வதற்குத் தேவையான வருமானத்தை இப்போதே ஈட்டத் திட்டமிட்டுள்ளதாகக் கூறுகிறார். இதற்காகத் தனது தொழிலை மேலும் விரிவுபடுத்தி கூடுதல் கிளைகளைத் தொடங்க அவர் விரும்புகிறார். துபாயில் மட்டுமல்லாமல், அபுதாபி அல்லது புஜாய்ரா போன்ற பிற ஐக்கிய அரபு அமீரகப் பகுதிகளிலும் சேர்த்து மொத்தம் ஐந்து கிளைகள் வரை தொடங்க வேண்டும் என்பதே இவரது அடுத்தகட்ட இலக்காகும். “சின்ன தொழிலாக இருந்தாலும் அதை விருப்பத்துடனும் திறமைய