வங்கதேசத்தின் தவுலத்தியா படகு முனையத்தில், சுமார் 40 பயணிகளுடன் டாக்கா நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று பத்மா ஆற்றைக் கடப்பதற்காக மிதவைப் பாலத்தில் ஏறியது. அப்போது, எதிர்பாராதவிதமாக ஒரு சிறிய படகு அந்த மிதவைப் பாலத்தின் மீது மோதியதால், நிலைதடுமாறிய பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
At least 35 passengers are missing after a bus plunged into the Padma River at Daulatdia Ghat, Bangladesh; two bodies have been recovered so far as rescue operations continue.
People live like cockroaches and die like cockroaches
pic.twitter.com/kq6pxbfvrs— Lord Immy Kant (@KantInEastt) March 25, 2026
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் ஆற்றில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விபத்தில் மாயமான சிலரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்தத் துயரச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும், ஆற்றுப் போக்குவரத்தின் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
