உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் அதிவேகமாக வந்த பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, பாலத்தின் கைப்பிடிச் சுவரை உடைத்துக்கொண்டு கால்வாய்க்குள் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிதுனு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராம்கங்கா கால்வாயில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பேருந்து எதிர்பாராத விதமாக கால்வாயில் பாய்ந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக மீட்புப் பணியில் இறங்கினர்.
தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் கால்வாயில் குதித்த உள்ளூர் மக்கள், பேருந்தின் உள்ளே சிக்கித் தவித்த பயணிகளை மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தண்ணீருக்குள் மூழ்கிய பேருந்திலிருந்து பயணிகளை ஒவ்வொருவராக வெளியே கொண்டு வரும் காட்சிகள் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள காவல்துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர், காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதோடு, மேலதிக மீட்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
यूपी: कानपुर में तेज रफ्तार बस रेलिंग तोड़कर नहर में जा गिरी। जान जोखिम में डालकर स्थानीय लोग बस में फंसे यात्रियों को बाहर निकालने में जुटे है। मामला बिधनू थाना क्षेत्र के राम गंगा नहर का है। pic.twitter.com/PPyeHuNAO5
— Shahnawaz(News24) (@Shahnawazreport) May 7, 2026
