அதிகாலை 3 மணிக்கு கேட்ட பயங்கர அலறல் சத்தம்… தலைகுப்புற பேருந்து கவிழ்ந்து, உடல் நசுங்கி… பரமத்தி அருகே நடந்த துயர சம்பவம்…!

By Nanthini on கார்த்திகை 5, 2025

Spread the love

பரமத்தி அருகே உள்ள கீரம்பூரில் சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் தான் ஆந்திராவில் ஒரு பயங்கர தீ விபத்து நடந்ததில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த சம்பவம் அடங்குவதற்குள் தற்போது நாமக்கல் பரமத்தி அருகே உள்ள கீரம்பூரில் பெங்களூரில் இருந்து கொடைக்கானல் செல்வதற்காக வந்த சொகுசு பேருந்து இன்று அதிகாலை 3 மணிக்கு பைபாஸ் சாலையில் அதிவேகமாக வந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்த மின்விளக்கு கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சொகுசு பேருந்து கவிழ்ந்ததில் பேருந்தில் பயணம் செய்த 16 பேரில் 5 பேர் லேசான காயங்களுடன் உயிர்த்தப்பினர்.

ஆனால் அவர்களில் ஒருவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். விபத்தில் உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.