சென்னையிலிருந்து ஹைதராபாத்திற்கு செல்ல 12 நேரமாவதால் நேர விரயம், பயணக் களைப்பு என தவிக்கும் மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது. அதாவது இனி 2.30 மணி நேரத்தில் ஹைதராபாத் செல்லலாம் என்ற செய்தி தான் வெளிவந்துள்ளது.
அதாவது சென்னை மற்றும் ஹைதராபாத் இடையேயான 778 கிலோ மீட்டர் புல்லட் ரயில் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்த மாதம் இறுதிக்குள் தமிழக அரசு ஒப்புதல் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அரசு ஒப்புதல் வழங்கி விட்டால் இனி சென்னையில் இருந்து 2:30 மணி நேரத்தில் ஹைதராபாத் சென்றுவிடலாம்.
