தமிழகத்தில் இனி வெறும் 24 நாட்கள் தான்… தமிழக அரசின் அதிரடி உத்தரவு… பொதுமக்களுக்கு குட் நியூஸ்….!

By Nanthini on வைகாசி 31, 2026

Spread the love

தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், பொதுமக்கள் எவ்வித சிரமமும் இன்றி எளிதாகப் பயன்பெறவும், திட்டம் மற்றும் கட்டட அனுமதிகளை விண்ணப்பித்த 24 நாள்களுக்குள் வழங்க வேண்டும் என்று அரசு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள இந்த அதிரடி சுற்றறிக்கையில், பொதுமக்கள் சமர்ப்பிக்கும் விண்ணப்பங்கள் மீது தேவையற்ற காலதாமதம் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, விண்ணப்பித்த 5 நாள்களுக்குள் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் சென்று கள ஆய்வு செய்ய வேண்டும் என மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நிர்வாக நடைமுறைகள் விரைவுபடுத்தப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகளின் சேவைகளில் பொதுமக்களுக்கான நம்பகத்தன்மையும், வேகமும் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.