அப்படியே மொத்தமா மாறுது… மகளிருக்கு மாதம் ரூ.2500 திட்டம்… விஜய் போட்டு வைத்திருக்கும் மெகா ப்ளான்…. வெளிவந்த புது தகவல்….!

By Nanthini on ஆடி 27, 2026

Spread the love

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட மகளிர் உரிமைத்தொகை திட்டம், தற்போது அடுத்தகட்ட மாற்றத்தை எதிர்நோக்கியுள்ளது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது திமுகவின் முக்கிய வாக்குறுதியாக அறிவிக்கப்பட்டு, 2023-இல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ என்ற பெயரில் மாதம் ரூ.1,000 வழங்கும் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. சுமார் 1 கோடியே 31 லட்சம் குடும்பத் தலைவிகள் இதன் மூலம் பயன்பெற்று வரும் நிலையில், இத்திட்டம் இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்று மகாராஷ்டிரா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பல்வேறு பெயர்களில் அமல்படுத்தப்பட்டது.

இதனிடையே, 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தங்கள் ஆட்சி அமைந்தால் குடும்பத் தலைவிகளுக்கான மாதாந்திர உரிமைத்தொகை ரூ.1,000-லிருந்து ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என வாக்குறுதி அளித்‌திருந்தார். தேர்தல் நிறைவடைந்து தவெக ஆட்சி அமைத்துள்ள நிலையில், குடும்பத் தலைவிகள் மத்தியில் இந்த வாக்குறுதி எப்போது நிறைவேற்றப்படும் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பெண்களுக்கு வழங்கப்படும் நிதி உதவியை உயர்த்துவது மட்டுமன்றி, தகுதியுள்ள கூடுதல் பயனாளிகளையும் இத்திட்டத்தில் இணைப்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

   

வரும் 2026-2027 ஆம் நிதி ஆண்டுக்கான தவெக அரசின் முதல் முழுமையான பட்ஜெட்டை தயாரிக்கும் பணியில் முதல்வர் விஜய் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய நிதி அமைச்சர் மரிய வில்சன், அரசின் முதல் பட்ஜெட் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும், தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றும் வகையில் பல முக்கிய அறிவிப்புகள் அதில் இடம்பெறும் என்றும் உறுதி அளித்துள்ளார். இதனால், வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே ரூ.2,500 உரிமைத்தொகை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

   

மேலும், இத்திட்டத்தின் பெயரை மாற்றுவது குறித்தும் அரசு பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதுள்ள ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ என்ற பெயரை மாற்றி, ‘மதிப்புமிகு மகளிர் திட்டம்’ எனப் புதிய பெயர் சூட்ட ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதேவேளையில், இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனையான அஞ்சலை அம்மாளின் தியாகத்தைப் போற்றும் வகையில் ‘அஞ்சலை அம்மாள் மகளிர் உரிமைத்தொகை திட்டம்’ என்ற பெயரை வைக்கும் யோசனையும் அரசின் பரிசீலனையில் உள்ளது. வரும் ஆகஸ்ட் மாத பட்ஜெட்டில் தொகையின் உயர்வு, தகுதிகள் மற்றும் புதிய பெயர் குறித்த தெளிவான அறிவிப்பு வெளியாகும் என தமிழகப் பெண்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.