இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது புதுவிதமான சேவைகளை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது நாடு முழுவதும் தனது வாடிக்கையாளர்களுக்கு செல்போன் ரீசார்ஜில் 5% தள்ளுபடி வழங்கும் பிளானை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதாவது 485 திட்டம் இனி 460 ரூபாய்க்கு கிடைக்கும். இதில் 72 நாட்கள் வேலிட்டியுடன் தினமும் 2ஜிபி அதிவேக டேட்டா, அன்லிமிடெட் கால், தினமும் 100 SMS ஆகியவற்றை பெறலாம். இதேபோல 1999 ரூபாய் ரீசார்ஜ் பிளானிலும் 100 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
