BSNL அதிரடி ஆஃபர்… அதிகரித்த டேட்டா…. ஜனவரி 31 வரை மட்டுமே…!

By Nanthini on மார்கழி 29, 2025

Spread the love

இந்தியாவின் பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனங்களில் ஒன்றான பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து புதுவிதமான சேவைகளை வழங்கி வருகிறது. அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்காக ஏராளமான சலுகைகளுடன் ரீசார்ஜ் ஆஃபர்கள் வழங்கப்படுவதுடன் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களும் அறிமுகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் வாடிக்கையாளர்களுக்கு ஆஃபர்களை அள்ளி வீசி வரும் பிஎஸ்என்எல் நிறுவனம் முக்கியமான ரீசார்ஜ் பிளானில் டேட்டாவை அதிகரித்துள்ளது. 225 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு மாதத்திற்கு தினமும் 2.5GB டேட்டா சேவையை பெறலாம். தற்போது அது தினமும் 3GB ஆக மாற்றப்பட்டுள்ளது. இதே சேவையை பெற நெட்வொர்க்களிலும் பெற 400 ரூபாய் வரை செலவிட வேண்டும் . இந்த ஆஃபர் ஜனவரி 31ஆம் தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.