கடந்த சில மாதங்களாகவே BSNL மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களை விட முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் ஏர்டெல் ஜியோ வி ஐ நிறுவனங்கள் தங்களது சேவை கட்டணங்களின் விலை உயர்த்தியது. இதுதான் நமக்கு கிடைத்த வாய்ப்பு என்று BSNL சேவை கட்டணத்தை குறைத்தது.

இதன் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் மற்ற தொலைதொடர்பு சேவைகளில் இருந்து BSNL இல் இணைந்தனர். அதனால் BSNL பயனர்களின் அனுபவத்தை அதிகரிக்க பல முயற்சிகளை செய்து வருகிறது. தற்போது BSNL அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். இந்தியா முழுக்க தற்போது சிறப்பான 4G சேவை வழங்க BSNL பல இடங்களில் டவர்களை அமைத்து வருகிறது.
பயனர்களுக்கு சிறப்பான 4G சேவை வழங்குவது மட்டுமல்லாமல் இதன் ரீசார்ஜ் திட்டங்களை மிக குறைந்த விலையில் வழங்கி வருகிறது. BSNL இதுவரை சுமார் 50,000க்கும் மேற்பட்ட 4ஜி டவர்களை நிறுவி உள்ளதாக அறிவித்திருக்கிறது. இதில் மற்றொரு மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் BSNL 5G சேவையை அறிமுகப்படுத்துவதற்கான வேலையை தொடங்கி இருக்கிறது.

BSNL 5G நெட்வொர்க்கின் பணிகள் முன்னேற்றத்துடன் நடந்து வருவதாகவும் சோதனை கட்டங்கள் கிட்டதட்ட முடிவடைந்து விட்டதாகவும் கூறி இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் ஆத்மநிர்பார் பாரத் என்ற முயற்சியின் கீழ் BSNL அடுத்த ஆண்டு 5G சேவையை அறிமுகம் செய்ய இருக்கிறது. இது ஹை ஸ்பீடில் பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும் என கூறப்படுகிறது.
