பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள குருதாஸ்பூர் மத்தியா கிராமத்தில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான மனிதநேயமற்ற சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரவிக்குமார் என்ற இளைஞர், திருட்டுப் புகார் என்ற பெயரில் கிராம மக்களால் மரத்தில் தலைகீழாகக் கட்டித் தொங்கவிடப்பட்டார். மிருகத்தனமாக தாக்கப்பட்ட அவருக்கு, உடலில் காயங்கள் ஏற்பட்ட நிலையில், அந்தக் காயங்களில் மிளகாய்ப் பொடியைத் தூவி சித்திரவதை செய்துள்ளனர். இந்த மனிதாபிமானமற்ற செயல் அங்கிருந்த சிலரால் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ரவியின் தந்தை கண்ணீர் மல்கக் கூறுகையில், பழைய முன்விரோதம் காரணமாகவே தனது மகன் மீது இத்தகைய கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். தன் மகனைக் காப்பாற்றுமாறு அவர் கெஞ்சியும், அந்த வன்முறை கும்பல் எதற்கும் செவிசாய்க்காமல் தொடர்ந்து சித்திரவதை செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக அதே கிராமத்தைச் சேர்ந்த 16 பேர் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது.
यह वीडियो बिहार के बक्सर के गुरुदासपुर मठिया गांव का है। जिसे पेड़ पर उल्टा लटकाया हुआ है, उसका नाम रवि कुमार है। रवि के गांव वालो ने ही उस पर चोरी आरोप लगाकर उसके साथ दरिंदगी की तमाम हदें पार की हैं। उसे जानवरों की तरह पीटा गया, उसके शरीर पर जख्म हुए तो उन जख्मों पर मिर्च पाउडर… pic.twitter.com/0TQ7ZR4HJ0
— Wasim Akram Tyagi (@WasimAkramTyagi) April 16, 2026
இந்தச் சம்பவம் பல்வேறு தார்மீகக் கேள்விகளை எழுப்பியுள்ளது. ரவிக்கு நீதி கிடைக்க வேண்டாமா? சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு ஒரு மனிதனை மிருகத்தனமாக வதைத்தவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டாமா? என்பது போன்ற கேள்விகள் வலுவாக எழுந்துள்ளன. மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு எதிராக அனைத்து தரப்பினரும் குரல் எழுப்ப வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
