தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள கிளாக்குளம் வடக்குத் தெருவில் வேலாயுதம் என்பவருடைய மனைவி முத்தம்மாள்(80) தனியாக வசித்து வருகின்றார். இவருடைய வீட்டு வாசலில் அமர்ந்து அதே பகுதியை சேர்ந்த சின்னதுரை மகன் அருண்பாண்டி (20) என்பவர் மது அருந்திக் கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த முத்தம்மாள் அவர்களை கண்டித்துள்ளார். இவருடைய பேச்சைக் கேட்டு ஆத்திரமடைந்த அருண்பாண்டி வீட்டு வாசலில் கிடந்த துடப்பக்கட்டையால் முத்தம் மாலை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயம் அடைந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மூதாட்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அருண்பாண்டியனை கைது செய்த விசாரித்து வருகிறார்கள். ஒரு சாதாரண விஷயத்திற்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் (Kasganj) பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக அண்ணிக்கும் அவரது நாத்தனாருக்கும் இடையே ஏற்பட்ட சாதாரண…
2026 நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்குப் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா தனது…
திறன் பயிற்சியில் தேர்ச்சி பெறுவோருக்கு மட்டுமே தனது கட்சியில் பதவி வழங்க கே. அண்ணாமலை முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.…
திருவள்ளூர் மாவட்டம், காவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகத்தின் இளைய மகன் தீபக் (26), ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ஒரு…
"எல்லாவற்றிற்கும் திமுக தான் காரணம் என்று நீங்கள் கூறுவதாக இருந்தால், பிறகு ஏன் நீங்கள் ஆட்சியில் இருக்கிறீர்கள்? உங்கள் கைகளில்…
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள தனியார் கல்லூரி விடுதி மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய வார்டன் மீது போலீசார்…