குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டத்தில், கணவனைப் பிரிந்து வேறொரு நபருடன் வாழச் சென்ற திருமணமான பெண் ஒருவர் மீது, ‘புனிதப்படுத்தும் சடங்கு’ என்ற பெயரில் கொடூரத் தாக்குதலும் வன்கொடுமையும் இழைக்கப்பட்டுள்ளது. பெண்ணைக் சட்டவிரோதமாக அடைத்து வைத்திருந்த கணவன் குடும்பத்தினர், அவர் தப்பிச் சென்றதும் அவரைப் பின்தொடர்ந்து பிடித்துள்ளனர்.
பின்னர் அப்பெண்ணை மரத்தில் கட்டி வைத்து மரக்கட்டைகளால் சரமாரியாகத் தாக்கியும் உதைத்தும் சித்திரவதை செய்துள்ளனர். இக்காட்டுமிராண்டித்தனமான சம்பவத்தை வீடியோவாகப் பதிவு செய்தும் வந்துள்ளனர். இக்காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து, உடனடியாக விசாரணையில் இறங்கிய சுரேந்திரநகர் காவல்துறையினர், பெண்ணின் கணவர் உட்பட 9 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
