நள்ளிரவில் பயங்கரம்…! “காதல் திருமணம் செய்த மகள், மருமகன் மீது கொடூர வெறியாட்டம்… வீடு புகுந்து அரிவாளால் சரமாரி வெட்டிய தந்தை… பரபரப்பு சம்பவம்…!!

Spread the love

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த ஆகாஷ் (23) என்பவரும், நெல்லை மாவட்டம் அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த சுஷ்மிதா (21) என்பவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கல்லூரி படிப்பை முடித்த இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், சுஷ்மிதாவின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. எதிர்ப்பையும் மீறி இருவரும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு, பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவகாமிபுரத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவில் சுஷ்மிதாவின் தந்தை முருகன் என்பவர் ரகசியமாக மோட்டார் சைக்கிளில் சிவகாமிபுரத்தில் உள்ள இவர்களது வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டின் கதவைத் திறந்து உள்ளே புகுந்த முருகன், தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான அரிவாளால் மருமகன் ஆகாஷின் தலை மற்றும் கால்களில் சரமாரியாக வெட்டியுள்ளார். கணவனைக் காப்பாற்ற ஓடிவந்த சொந்த மகள் சுஷ்மிதாவிற்கும் கையில் வெட்டு விழுந்தது.

இருவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவும், முருகன் தான் கொண்டு வந்த பைக்கில் ஏறித் தலைமறைவானார். ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய தம்பதியை மீட்ட பாவூர்சத்திரம் போலிஸார், 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர்களைத் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆகாஷ் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய முருகனை தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

விஜய் பாணியில் தனுஷின் அடுத்த மூவ்…. அரசியல் களத்தில் இறங்கும் புதிய கட்சி… தேர்தல் ஆணையத்தில் ரகசியமாகப் பதிவான பெயர்?…. அதிர்ச்சியில் கோலிவுட்….!

தமிழகத்தில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக திமுக, அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளே மாறி மாறி ஆட்சிப் பொறுப்பேற்று வந்துள்ளன.…

10 seconds ago

“எல்லாம் முடிஞ்சது”… கள்ளக்காதலனுக்கு வந்த சீக்ரெட் மெசேஜ்… மாஸ்டர் பிளான் போட்டு கணவனை முடித்த மனைவி… காட்டிக்கொடுத்த வாட்ஸ்அப் சாட்டிங்…!!

கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே தனது கணவனை கொலை செய்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. கணவனைத் தீர்த்துக்கட்டிய பிறகு, அவர் திடீர்…

4 minutes ago

27 பெண்களுடன் உல்லாசம்… மனைவியை நண்பர்களுக்கு நிர்வாணமாக காட்டி பகீர் லீலை…. சீர்காழி ஐடிஐ ஆசாமியின் கொடூரம்…. பதறவைக்கும் சம்பவம்….!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே, திருமணமான 15 நாட்களிலேயே கணவனின் கொடூர லீலைகள் அம்பலமானதால் அதிர்ச்சியடைந்த பட்டதாரி பெண் ஒருவர்,…

6 minutes ago

“அண்ணா விட்டுடுங்க”.. கெஞ்சிய பெண்… நண்பர்களுடன் சேர்ந்து இளைஞர் செய்த வெறிச்செயல்… இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… வசமாக சிக்கிய கொடூர கும்பல்…!!

தமிழ்நாட்டில், தன்னை நம்பிக் காதலித்த இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த…

11 minutes ago

BREAKING: தாராபுரம் இடைத்தேர்தல் முடிவில் பெரும் திருப்பம்…. கருத்துக்கணிப்பில் பரபரப்பு ரிசல்ட்….. தவெகவுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி…!

அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்ற சுவாரஸ்யம் தமிழக அரசியலில் உச்சக்கட்டத்தை…

12 minutes ago

“என்னை யாரும் அழைக்கல.. நானும் போகல”…. தவெக மீது நாஞ்சில் சம்பத் கடும் அதிருப்தி… அரசியல் களத்தை அதிரவைத்த ஒற்றை பதிவு….!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுகவிலிருந்து விலகி, தளபதி விஜய்யை நேரில் சந்தித்துத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தவர் நாஞ்சில்…

17 minutes ago