டெராபஸ்சியில் கல்லூரி முடிந்து காரில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த கரண்பிரீத் சிங் (20) என்ற இரண்டாம் ஆண்டு கலைப் பிரிவு மாணவரை, இசாபூர் சாலையில் உள்ள ரயில்வே கேட் அருகே தார் காரில் வந்த மர்மக் கும்பல் ஒன்று மறித்தது. அக்கூம்பல் கூர்மையான ஆயுதங்கள் மற்றும் தடிகளால் கரண்பிரீத் சிங்கை கொடூரமாகத் தாக்கியதுடன், அவரது காரையும் அடித்து நொறுக்கிச் சேதப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றது.
காயமடைந்த மாணவரைப் பாதசாரிகள் உடனடியாக மீட்டு டெராபஸ்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், காயம் பலமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காகச் சண்டிகரில் உள்ள ஜி.எம்.சி.எச், செக்டார் 32 மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அவரைப் பரிந்துரைத்து அனுப்பி வைத்தனர்.
https://twitter.com/HateDetectors/status/2090698708539330953/video/1
சிகிச்சை பெற்று வரும் கரண்பிரீத் சிங் அளித்த புகாரில், தனது கல்லூரியைச் சேர்ந்த ‘குர்லி’ மற்றும் ‘குரி’ ஆகிய இருவருடன் இணைந்து சில அடையாளம் தெரியாத நபர்கள் இத்தாக்குதலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளையும் தாக்குதலுக்கான காரணத்தையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
