பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வசிக்கும் இரண்டு சகோதரர்கள், தங்களது ஒரே சகோதரிக்கு வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும் வகையிலான ஒரு மிகப்பெரிய பரிசை வழங்கியுள்ளனர். சுமார் 175 சதுர கெஜம் பரப்பளவில் கட்டப்பட்ட, 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புதிய வீட்டை அவர்கள் தனது சகோதரிக்கு அன்பளிப்பாக வழங்கினர். தந்தையின் மறைவுக்குப் பிறகு, தனது சகோதரிக்கு எந்தக் குறையும் இருக்கக் கூடாது என்ற நோக்கில் சகோதரர்கள் இருவரும் தங்களது உழைப்பில் இந்த வீட்டை வாங்கியுள்ளனர்.
இந்த வீட்டைப் பரிசளிப்பதற்காகச் சகோதரர்கள் ஒரு சிறப்பான ஆச்சரியத்தைத் திட்டமிட்டிருந்தனர். மேள தாளங்கள் முழங்க, உறவினர்கள் புடைசூழ தனது சகோதரியை அந்தப் புதிய வீட்டிற்கு அழைத்து வந்தனர். அங்கு வந்த பிறகுதான், அந்த வீடு தனக்காகத் தனது சகோதரர்கள் வாங்கிய பரிசு என்பது அவருக்குத் தெரியவந்தது. இதைக் கேட்டவுடன் அந்தச் சகோதரி இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனதோடு, உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதார்.
In a heartwarming moment in Ludhiana, two brothers surprised their only sister by gifting her a 175-square-yard house worth approximately ₹50 lakh. In an emotional moment, the sister embraced her brothers, her eyes welling with tears 😭 pic.twitter.com/lFSXZyESW3
— Dharm (@dhram00) May 9, 2026
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், அந்தச் சகோதரி தனது சகோதரர்களைக் கட்டிப்பிடித்து நெகிழ்ச்சியுடன் அழுவதும், குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியில் திளைப்பதும் காண்போரை நெகிழச் செய்கிறது. உடன்பிறந்த உறவின் உன்னதத்தை விளக்கும் இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள், “ஒவ்வொரு பெண்ணுக்கும் இப்படிப்பட்ட சகோதரர்கள் கிடைக்க வேண்டும்” எனப் பாராட்டி கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
