“கல்யாணம் பண்ணினா கடத்துவீங்களா…?” தங்கை என்றும் பார்க்காமல் காரில் தூக்கிய அண்ணன்கள்…! நெல்லையில் பரபரப்பு…!!

By Devi Ramu on பங்குனி 30, 2026

Spread the love

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருகே உள்ள ஆதியாக்குறிச்சியைச் சேர்ந்த செல்வா என்பவரும், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண்ணும் காதலித்து கடந்த 15-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். காவல்துறையினரின் முந்தைய விசாரணையில், அந்தப் பெண் தன் விருப்பப்படியே கணவருடன் செல்வதாக உறுதிபடத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பெண்ணின் வீட்டிற்கு வந்த அவரது இரண்டு சகோதரர்கள் மற்றும் உறவினர் ஒருவர், நைசாகப் பேசி திடீரென அந்தப் பெண்ணைக் காரில் வலுக்கட்டாயமாக ஏற்றித் தூக்கிச் சென்றனர். இந்தத் துணிகரக் கடத்தல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்துப் புகார் அளிக்கப்பட்ட நிலையில், குலசேகரன்பட்டினம் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி நெல்லையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெண்ணைப் பத்திரமாக மீட்டனர். கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட பெண்ணின் உடன் பிறந்த சகோதரர்கள் மற்றும் உறவினர் என மூன்று பேரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட அந்தப் பெண் மீண்டும் அவரது கணவர் செல்வாவிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டார். சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்த பெண்ணை உறவினர்களே கடத்தியது அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.