தமிழ்நாட்டில் விபச்சார விடுதிகள்… அரசு அனுமதியோடு இயங்கினால் மட்டுமே பாலியல் குற்றம் நடக்காது… காயல் அப்பாஸ் சர்ச்சை பேச்சு…!!

By Soundarya on ஆனி 16, 2026

Spread the love

மக்கள் எழுச்சி ஜனநாயகக் கட்சியின் தலைவர் காயல் அப்பாஸ், தமிழ்நாட்டில் விபச்சார விடுதிகள் அரசு அனுமதியோடு இயங்கினால் மட்டுமே பாலியல் குற்றங்களைக் குறைக்க முடியும் எனத் தெரிவித்துக் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டியில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்குத் தமிழக அரசு ₹50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், குற்றவாளிகளுக்குப் பிணை வழங்காமல் சாகும் வரை சிறையிலடைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கையில், கொல்கத்தாவின் சோனா காச்சி மற்றும் மும்பையின் கிராண்ட் ரோடு போன்ற பகுதிகளில் அரசு அனுமதியுடன் விபச்சார விடுதிகள் இயங்குவதால் அங்குப் பாலியல் குற்றங்கள் குறைவாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அதேபோலத் தமிழ்நாட்டின் முக்கிய மாநகரங்களிலும் அரசு அனுமதியுடன் விபச்சார விடுதிகள் இயங்கினால் மட்டுமே பாலியல் குற்ற சம்பவங்களை முற்றிலுமாகத் தடுக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார். மேலும், தமிழ்நாட்டில் இனி வரும் காலங்களில் இது போன்ற கொடூரங்கள் நடக்காமல் இருக்க, சிறுமிகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பைத் முதலமைச்சர் ஜோசப் விஜய் உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்