பிரிட்டனைச் சேர்ந்த சமூக வலைதள உள்ளடக்க உருவாக்குநரான ஏமி (‘Amy On The Move’), குஜராத்தின் டிசா பகுதியில் தனியாக ஓட்டப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது தனக்கு ஏற்பட்ட அச்சுறுத்தும் அனுபவம் குறித்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். அவர் கிராமப்புற சாலையில் ஓடிக்கொண்டிருந்தபோது, மர்ம நபர் ஒருவர் சைக்கிளில் அவரைத் தொடர்ந்து பின்தொடர்ந்து சென்றுள்ளார். முதலில் தற்செயலானது என நினைத்தாலும், ஆள் நடமாட்டமற்ற பகுதிகளிலும் அந்த நபர் விடாமல் பின் தொடர்ந்ததால் ஏமி பெரும் அச்சமடைந்துள்ளார்.
இந்த மன உலைச்சலை வீடியோவாகப் பதிவு செய்து அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்ட நிலையில், அந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அறிமுகமில்லாத தொலைதூரப் பகுதியில் ஒரு பெண் தனியாக இருக்கும்போது நிகழும் இதுபோன்ற சம்பவங்கள், வெளிநாட்டுப் பயணிகளிடையே பாதுகாப்பு குறித்த பெரும் கவலையையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளன.
https://www.instagram.com/reel/Db8gRgjMQYo/?utm_source=ig_embed&ig_rid=AmkJ4gswN1BTMw2pD0okxw7
இச்சம்பவம் தனியாகப் பயணம் மேற்கொள்ளும் பெண்களின் பாதுகாப்பு குறித்த முக்கிய விவாதத்தை மீண்டும் உருவாக்கியுள்ளது. குறிப்பாக, முன்பின் தெரியாத இடங்களில் தனியாக பயணிக்கும் போது சுற்றுப்புறத்தை எப்போதும் கவனமாகக் கண்காணிப்பதன் அவசியத்தையும், குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் நேரலை தொடர்பில் இருப்பதன் முக்கியத்துவத்தையும் பலரும் சமூக வலைதளங்களில் வலியுறுத்தி வருகின்றனர்.
அதேவேளையில், வீடியோவில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து உள்ளூர் காவல்துறையினரால் எடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. வெளிநாட்டுப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், நாட்டின் மதிப்பைத் தக்கவைக்கவும் இச்சம்பவம் குறித்து உரிய அதிகாரப்பூர்வ விசாரணை விரைந்து நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகின்றன.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…