மணமேடையில் தாலியை கையில் எடுத்த மாப்பிள்ளை… திடீர் ட்விஸ்ட் வைத்த மணமகள்…. ஊரே அதிர நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

By Nanthini on ஆவணி 30, 2025

Spread the love

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கிராமத்தில் வசித்து வரும் 25 வயதை இளம் பெண் ஒருவருக்கும் ராதாபுரம் பகுதியை சேர்ந்த 27 வயது கார் டிரைவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பெற்றோர்களால் திருமணம் நிச்சயக்கப்பட்டது. நேற்று இவர்களின் திருமணம் மணமகள் வீட்டில் வைத்து நடைபெற இருந்த நிலையில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்தது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மணப்பெண்ணை ஒரு இளம் பெண் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியபோது மணமகளுக்கும் தனக்கும் நீண்ட காலம் தொடர்பு இருப்பதாக கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மணப்பெண் உடனே வருங்கால கணவரை செல்போனில் தொடர்பு கொண்டு நடந்த விவரத்தை கூறிய நிலையில் அந்தப் பெண் தனக்கு தங்கை மாதிரி, அவளுடன் அப்படித்தான் பழகினேன் என்று கூறியுள்ளார். இதனை ஏற்க மறுத்த அந்த மணமகள் அந்தப் பெண் உடனான தொடர்பை துண்டிக்க வேண்டும் என்று கூறியதால் மணமகன் அந்த பெண் தான் தனக்கு மிகவும் முக்கியம்., அவளுடன் இருக்கும் தொடர்பை கைவிட முடியாது என்று கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மணமகள் என்ன செய்வது என்று தெரியாமல் திருமணத்தில் விருப்பமில்லை என எனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

   

பெற்றோர்களும் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த நிலையில் திருமணம் நெருங்கியது. நேற்று காலை மணமகன் வீட்டிலிருந்து அனைவரும் வந்த நிலையில் மணமேடையில் மணமகன் அமர்ந்திருந்தபோது மணப்பெண் ஒருவித குழப்பத்துடன் அருகில் அமர்ந்திருந்தார். அப்போது மணமகன் தாலியை கையில் எடுத்த நேரத்தில் திடீரென்று அந்த இளம் பெண் தனக்கு இந்த மாப்பிள்ளை பிடிக்கவில்லை, திருமணத்தை நிறுத்துங்கள் என்று கூறியுள்ளார். அனைவரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் நடந்த விஷயத்தை மணமகள் கூறியுள்ளார்.

   

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மணமகனை திருமணம் செய்ய மாட்டேன் என்பதில் மணமகள் உறுதியாக இருந்ததால் வேறு வழி இல்லாமல் திருமணமும் நிறுத்தப்பட்டது. இதனால் மணமகன் வீட்டார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.