“பணம் கொடுத்தா தான் TC” பெற்றோரிடம் லஞ்சம் கேட்டபோது… கேமராவைக் கண்டதும் நடுங்கிய பள்ளி முதல்வர்… திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்..!!

By Soundarya on வைகாசி 14, 2026

Spread the love

டெல்லியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், தனது குழந்தையின் மாற்றுச் சான்றிதழை (TC) வாங்குவதற்காக ஒரு தந்தை சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த பெண் முதல்வர், சான்றிதழைத் தர வேண்டும் என்றால் ₹200 லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று பிடிவாதமாகக் கேட்டுள்ளார். அனைத்துப் பள்ளிக் கட்டணங்களையும் ஏற்கனவே முழுமையாகச் செலுத்திவிட்டதாகவும், சான்றிதழ் பெற பணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை என்றும் தந்தை தெளிவாக எடுத்துரைத்துள்ளார். எனினும், அந்தப் பெண் முதல்வர் பணப் பேராசையோடு தொடர்ந்து லஞ்சம் கேட்டு அலைக்கழித்துள்ளார்.

பணத்தை வாங்குவதில் அந்தப் பெண் முதல்வர் பிடிவாதமாக இருந்ததால், ஆத்திரமடைந்த அந்த வாலிபர் தனது மொபைல் போனில் வீடியோ பதிவு செய்யத் தொடங்கினார். கேமராவைக் கண்டதும் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் முதல்வர், தனது தவறை உணர்ந்து உடனடியாகப் பணத்தைத் திரும்பக் கொடுக்க முயன்றார். கேமராவுக்குப் பயந்து அவர் பதறிய காட்சி, அங்கு அரங்கேறிய லஞ்ச நாடகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

   

இந்த வாலிபர் விழிப்புணர்வுடன் வீடியோ எடுத்ததால் இந்த ஒரு சம்பவம் இன்று வெளியே தெரிந்துள்ளது. ஆனால், இதற்கு முன்பு இதேபோல் எத்தனை ஆயிரம் மாணவர்களிடம் இந்த பெண் முதல்வர் பணத்தை லூட்டி அடித்திருப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கல்வி கற்பிக்கும் இடத்தில் இருந்துகொண்டு பணப் பசியுடன் செயல்படும் இதுபோன்ற நபர்களை, நிர்வாகமும் அரசும் உடனடியாகப் பணியில் இருந்து நீக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.