தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் பக்தி பரவசத்துடன் நிகழ்ந்த கார்த்திகை தீபம் நிகழ்வு திருப்பரங்குன்றத்தில் பதற்ற நிகழ்வாக மாறி உள்ளது. நீதிபதி சுவாமிநாதன் அளித்த உத்தரவுடன் CISF படையினரை கூட்டிக் கொண்டு வந்தவர்களுக்கு திருப்பரங்குன்றம் மலையேற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனின் உத்தரவுக்கு பிறகு அமைதியான சூழல் மாறி பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
பதற்றமான சூழலில் தீபம் ஏற்றப்பட்ட நிலையில் சாலை தடுப்புகளை தூக்கி வீசி எறிந்து போலீசார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.
