திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடுகள் நிறைவடைந்து வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது தமிழக முன்னேற்றக் கழகம் இக்கூட்டணிக்கு தனது ஆதரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் செங்கம் கு.ராஜாராம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து, வரும் தேர்தலில் திமுக கூட்டணிக்குத் தனது கட்சி நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாகத் தெரிவித்து அதற்கான கடிதத்தையும் வழங்கினார். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள சூழலில், இந்த புதிய சேர்க்கை திமுக கூட்டணிக்கு கூடுதல் பலத்தை அளிப்பதாகக் கருதப்படுகிறது.
