BREAKING: தங்கம் விலை மேலும் குறைந்தது.. நகை பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்..!!!

By Muthu Mani on வைகாசி 27, 2026

Spread the love

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவின் எதிரொலியால் சென்னையில் தங்கம் விலை இன்று (மே 27) சவரனுக்கு அதிரடியாக ₹640 குறைந்து நுகர்வோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதன் காரணமாக, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ₹80 குறைந்து ₹14,650-க்கும், 8 கிராம் கொண்ட ஒரு சவரன் ₹1,17,200-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ₹400 குறைந்திருந்த நிலையில், இன்று மேலும் சரிந்து தொடர்ந்து இரண்டாவது நாளாக வீழ்ச்சியைக் கண்டுள்ளது நகைப்பிரியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.