சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் பயணித்து வரும் நிலையில், இன்று (ஜூலை 10) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு மேலும் ரூ.240 உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை நேர வர்த்தகத்தில் சவரனுக்கு அதிரடியாக ரூ.800 அதிகரித்ததைத் தொடர்ந்து, இன்றைய காலை நேர வர்த்தகமும் உயர்வுடன் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விலை ஏற்றத்தின் படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ரூ.13,350-க்கும், ஒரு சவரன் ரூ.1,06,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. உலகளாவிய பொருளாதார சூழல் மற்றும் சந்தை மாற்றங்கள் காரணமாக தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து வருவதே இந்த தொடர் விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
